புதுடெல்லி: இந்திய கடற்படைக்கு நடுத்தர தூர வான் ஏவுகணைகளை தயாரித்து வழங்குவதற்காக பொதுத் துறை நிறுவனமான பாரத் டைனமிக்சுடன் பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.2960கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ்குமார் சிங் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும் பாரத் டைனமிக்ஸ் நிறுவன அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நடுத்தர தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை அமைப்பானது பல இந்திய கடற்படை கப்பல்களில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக வாங்கப்படும் ஏவுகணைகள் வருங்காலத்தில் கப்பல்களில் பொருத்தப்படும். இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும், மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பத்தை உள்நாட்டு மயமாக்குவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் ஒரு முக்கிய மைல் கல்லாகும் ”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post கடற்படைக்கு ஏவுகணை ரூ.2960 கோடியில் ஒப்பந்தம் appeared first on Dinakaran.