பெங்களூரு: ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் முதல் பாகம் ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு கர்நாடகாவின் கவுகுடா வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வனப்பகுதியில் வெடிபொருட்களைப் பயன்படுத்தியதாகவும், வனப்பகுதிக்கு தீ வைத்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதாகவும் அப்பகுதி கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் வனப்பகுதியில் தீ வைப்பதன் காரணமாக அங்குள்ள விலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வருவதாகவும், படப்பிடிப்பை உடனடியாக நிறுத்தி சுற்றுச்சூழலைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக படக்குழுவுக்கும், கிராமத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் அக்கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் என்ற இளைஞர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து படக்குழு மீது எசலூர் காவல் நிலையத்தில் கிராம மக்கள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் படப்பிடிப்பின்போது வெடி பொருட்கள் மூலம் காடுகள் சேதமாக்கப்படுவதாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post ‘காந்தாரா-1’ படப்பிடிப்பின்போது வெடி பொருட்கள் மூலம் காடுகள் சேதமாக்கப்படுவதாக தயாரிப்பாளர், இயக்குநர் ரிஷப் ஷெட்டி மீது வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.