டெல்லி: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி முதல் மே மாதம் வரை 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 36 கூட்டங்கள் நடந்து முடித்திருக்கிறது. இந்நிலையில் இன்று காவரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 37வது கூட்டம் காணொலி வாயிலாக டெல்லியில் தொடங்கியது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹெல்தர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கோடை கால தண்ணீர் தேவையை முன்னிறுத்தி தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசுப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அந்த வகையில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி முதல் மே மாதம் வரை 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி முதல் மே மாதம் வரை 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.