டெல்லி: காஷ்மீர் பயணத்தை ரத்து செய்துவிட்டு தமிழ்நாடு திரும்புபவர்களுக்கு தங்க டெல்லி இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 30 பயணிகள் இன்று பிற்பகல் டெல்லி திரும்புகின்றனர். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு கூடுதல் விமானங்களை இயக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் கட்டணங்களை உயர்த்தக்கூடாது எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு விராட் கோலி, நிவின் பாலி, மஞ்சுவாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
The post காஷ்மீர் பயணத்தை ரத்து செய்துவிட்டு தமிழ்நாடு திரும்புபவர்களுக்கு தங்க டெல்லி இல்லத்தில் ஏற்பாடு appeared first on Dinakaran.