டெல்லி : குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக்குவது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா எல்லையான கனோரியில் 50 நாட்களுக்கும் மேலாக விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதையடுத்து கிட்டத்தட்ட ஓராண்டிற்கு பிறகு, ஒன்றிய அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளது. இதனிடையே போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்ட டிராக்டர் பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என்று விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் அறிவித்துள்ளார். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பாஜகவின் அலுவலகங்கள், வணிக வளாகங்கள் முன்பு ட்ராக்டர்கள் நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகள், சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி போராட்டம் நடத்தப்படும் :விவசாயிகள் அறிவிப்பு!! appeared first on Dinakaran.