திருவனந்தபுரம்: கேரள இளைஞர் ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் காதலி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள கல்லூரியில் படித்தவர் பாறசாலையைச் சேர்ந்த ஷாரோன் (23). அவரது காதலி களியக்காவிளை ராமவர்மன்சிரையை சேர்ந்த கிரீஷ்மா. இதற்கிடையே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து ஷாரோனை கொலை செய்தார் கிரீஷ்மா. இந்த வழக்கு தொடர்பாக திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கிரீஷ்மா, அவரது தாய், மாமாவை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு நெய்யாற்றின்கரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 95 சாட்சிகள் விசாரணை நடத்தப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கில் அவரின் காதலி க்ரீஷ்மா, க்ரீஷ்மாவின் மாமா நிர்மலாகுமரன் ஆகியோர் குற்றவாளி என நெய்யந்திகரை விசாரணை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. கிரீஷ்மாவின் தாயார் சிந்துவுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனவே க்ரீஷ்மாவின் தாய் விடுவிக்கப்பட்டார். தண்டனை குறித்த விவரங்கள் நாளை (ஜன.18) அறிவிக்கப்படவுள்ளது.
The post கேரள இளைஞர் ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் காதலி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு! appeared first on Dinakaran.