கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என சியல்டா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 2024 ஆகஸ்ட்.9ல் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணையை சிபிஐ வசம் ஐகோர்ட் ஒப்படைத்தது. வழக்கு தொடர்பாக சியல்டா மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் சிபிஐ வலியுறுத்தியது. நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சியல்டா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
The post கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு..!! appeared first on Dinakaran.