சென்னை : சீமான் பேசுவதை பார்த்தால் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரா என்ற கேள்வி எழுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “பெரியாரை விமர்சித்து பாஜக ஆதரவாளர்கள் வாக்குகளை பெற சீமான் முயற்சிக்கிறாரா என்ற ஐயம் எழுகிறது.சீமானின் அரசியல், இனவாதத்தை நோக்கி பாசிச கூறுகளைக் கொண்டதாக உள்ளது. தமிழ் தேசியம் என்ற பெயரால் தமிழர்களுக்கு எதிரான அரசியலை சீமான் செய்கிறாரா என்ற கேள்வி எழுகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post சீமான் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரா? : திருமாவளவன் appeared first on Dinakaran.