டெல்லி : டி-72 ரக பீரங்கிகளுக்கான எஞ்சின்களை கொள்முதல் செய்வதற்காக ரஷ்யாவுடன் ரூ.2,156 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவைச் சேர்ந்த ரோசோபோரன் என்ற நிறுவனத்துடன் இந்த ஓப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் மிக முக்கிய பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாக கருதப்படும் டி 72 பீரங்கிகளில் தற்போது 780 எச்.பி ஆற்றல் உடைய எஞ்சின்கள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் டி 72 பீரங்கிகளுக்கு தேவையான ஆயிரம் எச்.பி. எஞ்சின்கள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலைக்கு நவீன தொழில்நுட்பங்களையும் ரஷ்ய நிறுவனம் வழங்கும் என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
The post டி-72 ரக பீரங்கிகளுக்கான எஞ்சின்களை கொள்முதல் செய்ய ரஷ்யாவுடன் ரூ.2,156 கோடி ஒப்பந்தம் கையெழுத்து : இந்திய பாதுகாப்பு அமைச்சகம் appeared first on Dinakaran.