டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் ஆம் ஆத்மி 27 ஆண்டுகளாக ஆட்சியை பிடிக்கமுடியாமல் போராடும் பாஜக, 2013க்கு பிறகு அரியணை ஏறமுடியாத காங்கிரஸ் என 3 முக்கிய கட்சிகளும் தீயாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குபதிவு நெருங்கி வரும் நிலையில் அரசியல் காட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 7 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
1. பாவனா கவுர் – பாலம்
2. நரேஷ் யாதவ் – மெஹ்ராலி
3. ராஜேஷ் ரிஷி – ஜனக்புரி
4. மதன் லால் – கஸ்தூர்பா நகர்
5. ரோஹித் மெஹ்ராலியா – திரிலோக்புரி
6. பி.எஸ். ஜூன் – பிஜ்வாசன்
7. பவன் சர்மா – ஆதர்ஷ் நகர் ஆகிய 7 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர்.
The post டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.