டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார். டெல்லி லோக் கல்யாண் சாலையில் பிரதமர் மோடியின் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் மீண்டும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கும், புதிய கல்வி கொள்கைக்கும் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியிடம் ஆளுநர் ரவி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
The post டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு.. தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து ஆலோசிப்பதாக தகவல்!! appeared first on Dinakaran.