புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த விஜேந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அக்கட்சியைச் சேர்ந்த ரேகா குப்தா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், ரோஹினி தொகுதி எம்எல்ஏ சட்டப்பேரவைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.