வாஷிங்டன்: வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக நோபல் குழுவை வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அதிரப் ட்ரம்ப் தொடர்ந்து அமைதிக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வார். போர்களை முடிவுக்குக் கொண்டு வருவார். உயிர்களைக் காப்பாற்றுவார். அவருக்கு மனிதாபிமான இதயம் உள்ளது. அதோடு, அவரின் விருப்பத்தின் சக்தி மலைகளைக்கூட நகர்த்தவல்லது. அவரைப் போல வேறு யாரும் இருக்க மாட்டார்கள். அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நோபல் குழு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.