டெல்லி: தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு மக்கள் குறித்து ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தர்மேந்திர பிரதானுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக பேசியுள்ளார். நாட்டின் ஒரு மாநில மக்களை பண்பாடு இல்லாதவர்கள் என்று அவதூறாக பிரதான் பேசி உள்ளதாக கார்கே கண்டனம் தெரிவித்தார்.
தர்மேந்திர பிரதானின் கருத்துகளை ஏற்று கொள்ள முடியாது என்றும் தமிழர்களின் சுயமரியாதையை அவமதிக்கும் நோக்கில் அவர் பேசியுள்ளார். நாட்டு மக்களை பிளவுபடுத்துவது பற்றியும் நாட்டைத் துண்டாக்குவது பற்றியும் பேசுவதாக கார்கே குற்றச்சாட்டு வைத்தார். மேலும், தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.பிரதானின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை அப்பட்டமாக புறக்கணித்துள்ளனர் என்றும் குற்றசாட்டு வைத்தார்.
The post தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல் appeared first on Dinakaran.