சண்டிகர்: பயிர்களுக்கும் சட்டபூர்வ குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சம்யுக்தா கிஷான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் பஞ்சாப் – அரியானா எல்லையில் உள்ள கன்னவுரியில், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். அவர் தனக்கு வழங்கப்பட்ட அனைத்து மருத்துவ உதவிகளையும் ஏற்க மறுத்துவிட்டார். இதனால், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்த சூழலில் விவசாய சங்கத்தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலுக்கு ஆதரவாக 111 விவசாயிகள் கொண்ட குழுவினர் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.
The post தல்லேவாலுக்கு ஆதரவாக 111 விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதம் தொடக்கம் appeared first on Dinakaran.