புதுடெல்லி: எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடு ஏற்றுமதிக்கான தடை செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடு கால்நடைகள் மற்றும் கோழி தீவனங்கள் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக நாட்டில் பால் விலை அதிகரிப்பதற்கு தீவனங்களின் விலை உயர்வும் முக்கிய காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தீவன ஏற்றுமதிக்கு தடை விதிப்பதன் வாயிலாக உள்நாட்டு தீவன உற்பத்தி அதிகரிக்க உதவும், அதன் மூலம் தீவன விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் எனவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடு ஏற்றுமதி செய்ய கடந்த 2023 ஜூலையில் தடை விதிக்கப்பட்டு, பின்னர் அவ்வப்போது அந்த தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடு ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
The post தவிடு ஏற்றுமதிக்கான தடை செப்.30 வரை நீட்டிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.