திருமலை: திருப்பதியில் மீண்டும் நாளை முதல் இலவச சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருப்பதி கோயிலில் கடந்த 9-ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி கடந்த 10-ம் தேதி முதல் நடந்து வந்தது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபத வாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஏகாதசி நிகழ்வு ஜனவரி 20ம் தேதியுடன் நிறைவு பெற்றது. வைகுண்ட ஏகாதசியையொட்டி வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இலவச தரிசனத்தற்கும் டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நாளை ஜன.20 முதல் டோக்கன் இன்றி இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதாவது ஜனவரி 20-ம் தேதி திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்கு எஸ்.எஸ்.டி டோக்கன்கள் விநியோகம் செய்யப்படாது. அன்று சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசன வரிசையில் மட்டுமே சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.
பக்தர்கள் பொதுவான சர்வ தரிசன வரிசையில் நேரடியாக சென்று திருவெம்பாவை தரிசனம் செய்யலாம்.சில அறிவுறுத்தல்கள் திருப்பதி தேவஸ்தான மூலமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது அதன்படி கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், நீண்ட நேரம் காத்திருக்க நேரிடும் என்பதை அதற்கு தகுந்தார் பயணத்தை முடிவு செய்து வரவும்.
அதிகாலை நேரம் அல்லது மாலையில் வரிசையில் நிற்பது சரியாக இருக்கும். முன்பதிவு டிக்கெட் பெற்றுள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்புதிய டோக்கன் விநியோகம் இல்லை. அதிக கூட்டம் எதிர்பார்க்கப்படுவதால் குழந்தைகள், மூத்த குடிமக்கள் பாதுகாப்புடன் வர வேண்டும்.
இந்த தரிசனத்தைப் பெற, திருப்பதியில் உள்ள சர்வ தர்ஷன் (SSD) கவுண்டர்களில் இருந்து பக்தர்கள் டோக்கன்களைப் பெற வேண்டும். டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் அவர்கள் தெரிவிக்க வேண்டும். தரிசனம் முடிந்ததும், கோயிலுக்கு வெளியே அமைந்துள்ள லடூ வளாகத்தில் டோக்கனைச் சமர்ப்பித்த பிறகு, பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்படும்.
The post திருப்பதியில் மீண்டும் நாளை முதல் இலவச சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் appeared first on Dinakaran.