துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஆகாசம்லோ ஒக்க தாரா’ படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நாயகியாக சாட்விகா வீரவள்ளி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இறுதியாக சாட்விகா வீரவள்ளியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
இப்படத்தினை கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமாஸ் மற்றும் லைட் பாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. கடந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு இப்படம் குறித்த எந்தவொரு அறிவிப்புமே இல்லாமல் இருந்தது.