திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தெலுங்கு திரைப்பட பிரபலங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக நேற்று சோதனை நடத்தினர். தயாரிப்பாளரும் தெலங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவருமான தில் ராஜுவின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடந்தது. மேலும் புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் மற்றும் மேங்கோ மீடியா அலுவலகங்களிலும் இரண்டாவது நாளாக சோதனை நடத்தப்பட்டது. ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் குவித்த புஷ்பா-2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் வீட்டிலும் சோதனைகள் நடந்து வருகிறது.
The post தெலுங்கு திரையுலக பிரபலங்களின் வீடுகளில் 2வது நாளாக ரெய்டு appeared first on Dinakaran.