டெல்லி : தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது மத்திய அரசு என்று திமுக எம்.பி. திருச்சி சிவா பேட்டி அளித்துள்ளார். மேலும் பேசிய அவர், “மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களில் தொகுதிகளை குறைப்பதா? விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுவரையெனில், அது என்ன விகிதாச்சாரம் என விளக்கம் தேவை; உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு வந்து பதிலளிக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது மத்திய அரசு – திமுக எம்.பி. திருச்சி சிவா பேட்டி appeared first on Dinakaran.