திருமலை: ஐதராபாத் பொருட்காட்சியில் தொழில்நுட்ப கோளாறால் 20 நிமிடம் தலைகீழாக ராட்டினம் தொங்கி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நாம்பள்ளி பொருட்காட்சியில் நேற்றுமுன்தினம் காணும் பொங்கல் என்பதால் குடும்பத்துடன் பலர் பொருட்காட்சிக்கு வந்திருந்தனர். இந்நிலையில் இரட்டை ராட்டினம் கொண்டதில் பலர் ஏறி அமர்ந்தனர். சில நிமிடங்கள் ராட்டினத்தில் அமர்ந்திருந்தவர்களுக்கு சிலிர்ப்பைத் தரும் வகையில் தலைகீழாக சுற்றி திரும்பவும் கீழே இறக்கப்பட்டது.
மீண்டும் மற்றொரு முறை மேலே சென்று தலைகீழாக திரும்பிய போது மீண்டும் கீழே இறங்காமல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அப்படியே நின்று விட்டது. இதனால் அதில் அமர்ந்திருந்தவர்கள் உயிர் பயத்தில் அலறினர். உடனடியாக கீழே இருந்த அவர்களின் உறவினர்கள் கூச்சலிட்டு கதற ஆரம்பித்தனர். அதன் பிறகு ஒரு சிறப்புக் குழு இயந்திரத்தை ஆய்வு செய்து தொழில்நுட்ப கோளாறை சரி செய்தனர்.இதற்கு 20 நிமிடங்கள் ஆனது. அதன் பின்னர் அதில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியே அழைத்து வரப்பட்டனர். ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
The post தொழில்நுட்ப கோளாறால் 20 நிமிடம் தலைகீழாக தொங்கிய ராட்டினம்: ஐதராபாத் பொருட்காட்சியில் பரபரப்பு appeared first on Dinakaran.