ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுனின் தனிப் பாதுகாவலர் ஆண்டனி கைது செய்யப்பட்டார். ‘புஷ்பா 2’ பட ரிலீஸ் அன்று அல்லு அர்ஜுனைக் காண சந்தியா திரையரங்கில் கூடிய ரசிகர்களை தள்ளிவிட்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டதால் அடைப்படியில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் அல்லுஅர்ஜூன் நடித்த புஷ்பா-2 படத்தின் பிரீமியம் ஷோ கடந்த 4ம்தேதி ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் வெளியிடப்பட்டது. ரசிகர்களின் வரவேற்பை காண்பதற்காக அல்லுஅர்ஜூன் அன்றிரவு 9 மணிக்கு தியேட்டருக்கு சென்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் இறந்தார். மயங்கி விழுந்த அவரது மகன் ஸ்ரீதேஜ் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இதுதொடர்பாக சிக்கடப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்தனர். அவரை நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் உயர்நீதிமன்றம் அவருக்கு 4 வாரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதால், சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிக்கடப்பள்ளி போலீசார், அல்லு அர்ஜூனுக்கு இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினர்.
அதன்படி அல்லு அர்ஜுன் தனது வழக்கறிஞருடன் இன்று காலை 11 மணிக்கு சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். பின்னர் 4 மணி நேர விசாரணைக்குப் பின் தனது தந்தை அல்லு அரவிந்துடன் பகல் 2 மணியளவில் விசாரணை நிறைவடைந்து காவல் நிலையத்தில் இருந்து அல்லு அர்ஜுன் வீடு திரும்பினார்.
இந்நிலையில் அல்லு அர்ஜுனின் தனி பாதுகாவலர் அந்தோணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அல்லு அர்ஜுன் ஜாமினில் வெளிவந்ததை அடுத்து வரத்து தனி பாதுகாவலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
The post நடிகர் அல்லு அர்ஜுனின் தனிப் பாதுகாவலர் ஆண்டனி கைது! appeared first on Dinakaran.