திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹனிரோஸ் ஏராளமான கடை திறப்பு விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபரான பாபி செம்மண்ணூர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து போபி செம்மண்ணூர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை வயநாட்டிலுள்ள அவரது தோட்டத்தில் வைத்து கைது செய்தனர். நேற்று மதியம் போலீசார் அவரை எர்ணாகுளம் முதல் வகுப்பு குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் அபிராமி, போபி செம்மண்ணூரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாபி செம்மண்ணூர் மயக்கமடைந்தார். இதனால் சிறிது நேரம் அவரை ஓய்வு எடுக்குமாறு மாஜிஸ்திரேட் அபிராமி கூறினார். பின்னர் அவர் எர்ணாகுளம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
The post நடிகை ஹனிரோஸ் புகாரில் கைதான பாபி செம்மண்ணூருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.