டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலிவுறுத்தியுள்ளனர். உ.பி.யில் ராகுல் தடுத்து நிறுத்தம் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததால் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் அதானி விவகாரம் மற்றும் உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற மக்களவையில் அமலில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் தொடங்கிய மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் சோரோஸ் விவகாரத்தில் பா.ஜ.க.வின் விமர்சனங்களை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.