புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடர்களின் போது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெறும் முழு அலுவல் நேரங்கள் முழுமையாக ஒன்றிய அரசின் தொலைக்காட்சி நிறுவனமான சன்சத் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்து வருகிறது. கடந்த மழைக்கால கூட்டத்தொடர் முதல் மக்களவை நேரடி ஒளிபரப்பு நாட்டின் பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
குறிப்பாக மலையாளம், கன்னடம், குஜராத்தி, அசாமி, பெங்காலி, மராத்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை(டிச.4) முதல் சன்சத் தொலைக்காட்சியின் நேரடி பிரிவிலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு நேரலை நீக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு , புதுச்சேரி என தமிழ் மொழி பேசக்கூடிய இரு மாநிலத்துக்கும் 40 மக்களவை உறுப்பினர்கள் உள்ள நிலையில், மக்களவையில் நடைபெறும் விவாதங்கள் கேள்வி நேரம் உள்ளிட்டவை தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரலை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பு நீக்கம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை எழுப்பி உள்ளது.
The post நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் சன்சத் தொலைக்காட்சியில் இருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு நீக்கம் appeared first on Dinakaran.