புதுச்சேரி: புதுவை பட்ஜெட் கூட்டத்தொடரில் சாலை, மேம்பாலம் உள்ளிட்ட திட்டங்களுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. புதுவை நிதிநிலை அறிக்கையை நாளை மறுநாள் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்யவுள்ளார். புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு 4 வழிச்சாலை அமைக்கப்படும் என புதுவை துணை நிலை ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்திராகாந்தி சிலையில் இருந்து ராஜீவ்காந்தி சிலை வரை மேம்பாலம் அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
The post புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர்; சாலை, மேம்பாலம் உள்ளிட்ட திட்டங்களுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு: துணை நிலை ஆளுநர் தகவல் appeared first on Dinakaran.