ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வானிலை பெரும் மாற்றம் காண்டுள்ளது. அங்குள்ள சுரு மற்றும் சர்தார்சஹர் முதலான பகுதிகளில் கனமழை மற்றும் பனிக்கட்டி மழை பெய்து வருகிறது. அங்கிருக்கும் தெருக்களில் பனிக்கட்டிகள் ஒரு போர்வை போல விரிந்து கிடக்கும் படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வலம் வருகின்றன.
இந்திய வனத்துறை அதிகாரியான (ஐஎஃப்எஸ்) பர்வீன் கேசவன் இதுபோன்றதொரு வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை பகிர்ந்துள்ளார். அதில், ராஜஸ்தானின் சுருவில் உள்ள தெருக்கள், வீடுகள், திறந்தவெளிகள் பனிக்கட்டிகளால் வெள்ளைப் போர்வை போல மூடப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து, "இது காஷ்மீர் இல்லை… ராஜஸ்தானின் சுரு. கோடையில் இங்கு 50 டிகிரி வரை வெப்பம் தகிக்கும். எவ்வளவு கடுமையான வானிலை" என்று தெரிவித்துள்ளார்.