திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் கூறியது: போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று சமீபத்தில் நான் கூறியிருந்தேன். இதற்கு சிலர் எனக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே நான் எதற்காக அவ்வாறு கூறினேன் என விளக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நான் ஒரு மலையாளப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்தப் படத்தில் என்னுடன் சேர்ந்து நடித்த ஒரு முன்னணி நடிகர் போதைப் பொருள் பயன்படுத்துவதை நான் நேரடியாக பார்த்துள்ளேன். போதையில் என்னிடமும், இன்னொரு நடிகையிடமும் அவர் அத்துமீறினார். இதனால் அந்தப் படத்திலிருந்து விலக நான் தீர்மானித்தேன். ஆனால் டைரக்டரும், தயாரிப்பாளரும் என்னிடம் மன்னிப்பு கேட்டதாலும், நான் நடிக்காவிட்டால் அந்தப் படம் வெளிவராது என்பதாலும் வேறு வழியின்றி நடித்துக் கொடுத்தேன்.
தனிப்பட்ட முறையில் அவர் என்ன செய்தாலும் எனக்கு கவலை இல்லை. ஆனால் படப்பிடிப்புத் தளங்களில், பொது இடங்களில் போதைப் பொருள் பயன்படுத்தி மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால்தான் போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நான் நடிக்க மாட்டேன் என்று கூறினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். நடிகை வின்சி அலோஷியஸ் மலையாளத்தில் விக்ருதி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் பின்னர் கனகம் காமினி கலகம், ஜன கண மன, சவுதி வெள்ளக்கா, ரேகா உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ரேகா படத்தில் நடித்ததற்காக இவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
The post போதைப்பொருள் பயன்படுத்தி படப்பிடிப்பில் முன்னணி நடிகர் என்னிடம் அத்துமீறினார்: பிரபல மலையாள நடிகை பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.