புதுடெல்லி: 2017ம் ஆண்டு நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள போலாத் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் வெற்றி பெற்றவர் சுக்பால் சிங் கைரா. அவர் காங்கிரசில் இணைந்து 2022 தேர்தலில் போலாத் தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பணமோசடி புகார் தெரிவிக்கப்பட்டது.
அவரது நெருங்கிய கூட்டாளி குர்தேவ் சிங் மற்றும் அவரது வெளிநாட்டில் உள்ள கூட்டாளிகளால் இயக்கப்படும் சர்வதேச போதைப்பொருள் அமைப்பில் இருந்து ரூ. 3.82 கோடிக்கு குற்றத்தின் வருமானத்தை கைரா பெற்று பயன்படுத்தினார் என்று அமலாக்க இயக்குநரகம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கில் சண்டிகரின் 5வது பிரிவில் சுக்பால்சிங் கைராவிற்கு சொந்தமான வீட்டை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
The post போதைப்பொருள் வழக்கில் பஞ்சாப் காங். எம்எல்ஏ வீட்டை பறிமுதல் செய்த ஈடி appeared first on Dinakaran.