இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகளில் இன்று எழுச்சி நிலவியது. ஒரே நாளில் சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் அளவுக்கு உயர்ந்தது கவனிக்கத்தக்கது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 2,975 புள்ளிகள் உயர்ந்து 82,429 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 916 புள்ளிகள் உயர்ந்து 24,924 புள்ளிகளில் நிலைகொண்டது.