டெல்லி: போலி வாக்காளர்களை கலையெடுப்பது குறித்து உள்துறை அதிகாரியுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெறுவதாகவும், பல்வேறு மாநிலங்களிலும் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் புழக்கத்தில் உள்ளதாகவும் குற்றச்சாட்டினார். வாக்காளர் அடையாள அட்டையில் வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாகவும், ஆளும் பாஜக அரசுக்கு தேர்தலை ஆணையம் துணை போவதாகவும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், முறைகேடுகளை தடுப்பது குறித்து உள்துறை செயலாளர், சட்டப்பேரவை செயலர்கள் மற்றும் யூஐடிஏஐ அமைப்பின் செயல் அதிகாரி ஆகியோருடன் விரைவில் அலைசனை நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி டெல்லி இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதாரை இணைப்பது கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. 2021ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் இணைப்பு ஆகியவற்றை விரைவுபடுத்த தேர்தல் ஆணையத்தின் சார்பில் வலியுறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 பிரிவு 23 படி வாக்காளர் பதிவு அலுவலகம், வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண்ணை பெற்று முறைகேடுகளை தடுப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே அந்தந்த மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரிகளும் ஆலோசனை நடத்த உள்ளனர். இதில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
The post போலி வாக்காளர்களை கலையெடுப்பது குறித்து உள்துறை அதிகாரியுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..!! appeared first on Dinakaran.