பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாகும்பமேளா கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி நிறைவடைந்தது. 4,000 ஹெக்டேர் பரப்பளவில் 45 நாள்கள் நடைபெற்ற மகாகும்பமேளாவில் சுமார் 66 கோடி பக்தர்கள் கலந்து கொண்டு கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடினர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் பல்வேறு வௌிநாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிரமுகர்கள் மகாகும்பமேளாவில் புனித நீராடினர்.
மகாகும்பமேளா நிறைவடைந்து 12 நாள்களான நிலையில் தற்போதும் ஏராளமான பக்தர்கள் பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தருகின்றனர். இதுகுறித்து சில பக்தர்கள் கூறுகையில், “பக்தர்கள் கூட்டம் காரணமாக மகாகும்பமேளாவுக்கு செல்ல முடியாமல் போனது ஏமாற்றம் தந்தது. அதனால் இப்போது வந்து சங்கமம் பகுதியில் புனித நீராடினோம். இப்போது இங்குள்ள மாலை நேர வானிலை, கும்பமேளாவையொட்டி வைக்கப்பட்ட அலங்கார விளக்குகள் போன்றவை மகாகும்பமேளா இன்னும் நடப்பது போன்ற மகிழ்ச்சியை தருகிறது” என்றனர்.
The post மகா கும்பமேளா நிறைவடைந்தும் சங்கம் பகுதிக்கு வந்து புனித நீராடும் பக்தர்கள் appeared first on Dinakaran.