மதுரை: மதுரையில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் இருப்பதால் திமுக அலுவலகத்தை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை பி.பி.குளம் பகுதி திமுக நிர்வாகி ரவீந்திரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “மதுரை மாநகர் பி.பி.குளம் கண்மாயை ஒட்டி முல்லைநகர் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் குடிசை மாற்று வாரியம், மாநகராட்சி சார்பிலும் வீடுகள் வழங்கப்பட்டு அதில் மக்கள் வசிக்கின்றனர். பி.பி.குளம் கண்மாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.