புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தை சேர்ந்தவர் மோகித் குமார் (33). ஐடி ஊழியர். நொய்டாவில் ஓட்டல் அறையில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவரது சடலத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, மோகித் குமார் கடைசியாக பதிவு செய்த வீடியோ வாக்குமூலத்தை கைப்பற்றினர். அதில் மோகித், ‘‘நானும் என் மனைவி பிரியங்காவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.
திருமணத்திற்கு பின் தனிக்குடித்தனத்திற்கு வற்புறுத்திய அவர், பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்ததும் எனக்கு பல டார்ச்சர் தர ஆரம்பித்தார். என் மாமியார் பேச்சை கேட்டு சொத்துகளை அவள் பெயரில் மாற்றித் தர கட்டாயப்படுத்தினார். இல்லாவிட்டால் என் குடும்பத்தின் மீது பொய்யாக வரதட்சணை புகார் தருவதாக மிரட்டினார். என்னால் அவர்கள் தரும் உளவியல் ரீதியான தொல்லையை தாங்க முடியவில்லை.
இதுபோன்ற பிரச்னையிலிருந்து ஆண்களை பாதுகாக்கும் சட்டம் இருந்திருந்தால் இதுபோன்ற விபரீத முடிவை நான் எடுத்திருக்க மாட்டேன். எனது இறப்புக்கு பிறகும் நியாயம் கிடைக்காவிட்டால் என் அஸ்தியை கால்வாயில் கரைத்து விடுங்கள்’’ என விரக்தியுடன் கூறி உள்ளார்.
சமீபகாலமாக மனைவி டார்ச்சரால் வாலிபர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post மனைவி, மாமியார் டார்ச்சர் உபி ஐடி ஊழியர் தற்கொலை: அஸ்தியை கால்வாயில் கரைக்க கோரி வீடியோ appeared first on Dinakaran.