புதுச்சேரி: புதுச்சேரியில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுதாகவும், எம்பிபிஎஸ் பயிற்சி மருத்துவர்களுக்கும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் அரசு உத்தரவுப்படி ஊக்கத்தொகை வழங்குவதில்லை என்றும் புகார் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் 2 மாணவிகளுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர். அதன்பேரில், கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதுநிலை மருத்துவ மாணவரை 6 மாதம் சஸ்பெண்ட் செய்துள்ளது. புதுச்சேரி கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது தொடர்கிறது. இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: முதுநிலை மாணவர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.