கொல்கத்தா: மேற்கு வங்க மாநில கல்வித்துறை அமைச்சரான பிரத்யா பாசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவிான எஸ்எப்ஐ நேற்று அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஸ்டிரைக் நடத்தியது. அப்போது, மிட்னாபூர், சிலிகுரி, பன்சுகுரா ஆகிய இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான சத்ர பரிஷத் மற்றும் எஸ்எப்ஐ மாணவர்கள் இடையே மோதல் வெடித்தது. ஸ்டிரைக் காரணமாக ஏராளமான பல்கலைக்கழகங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.
The post மாநில அளவில் பல்கலை.யில் ஸ்டிரைக் இடதுசாரி மாணவர் பிரிவு- திரிணாமுல் காங். மோதல் appeared first on Dinakaran.