புதுடெல்லி: தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ.2.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி கூறிய ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,‘‘ஒன்றிய பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல், 17,500 பொது பெட்டிகள்,200 வந்தே பாரத் ரயில்கள் மற்றும் 100 அமிர்த பாரத் ரயில்கள் தயாரிப்பு என பல திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரூ.4.6 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களை 5 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் புதிய ரயில் பாதைகள், இரட்டை பாதைகள், நான்கு வழி பாதைகள்,ரயில் நிலையங்கள் மேம்பாடு,ரயில்வே மேம்பாலங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
100 அமிர்த பாரத்,50 நமோ பாரத், 200 வந்தே பாரத் ரயில்களில் ஸ்லீப்பர் மற்றும் இருக்கை வசதி என 2 விதமாகவும் தயாரிக்கப்படும். இது 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய அமிர்த பாரத் ரயில்கள் மூலம் குறைந்து தூரங்களை கொண்ட நகரங்களை இணைப்பதற்கான அதிக சேவைகள் தொடங்கப்படும். இனி வரும் ஆண்டுகளில் 17,500 பொது பெட்டிகளை தயாரிப்பதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் 1400 பெட்டிகளை தயாரிக்கப்பட்டு விடும். 2025-26ம் ஆண்டில் 2 ஆயிரம் பொது பெட்டிகளை தயாரிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.மேலும் 1000 புதிய ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன’’ என்றார்.
The post ரயில்வேக்கு ரூ. 2.52 லட்சம் கோடி appeared first on Dinakaran.