பாட்னா: ராகுல்காந்தி பேசியதை கேட்ட அதிர்ச்சியில் ரூ.250 மதிப்புள்ள பால் கீழே கொட்டிவிட்டதாக கூறி அவருக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தில் சோனுபூர் கிராமத்தை சேர்ந்தவர் முகேஷ் சவுத்ரி. இவர் ராகுல்காந்தியால் தனது பால் கீழே கொட்டிவிட்டதாக உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து முகேஷ் கூறுகையில்,’ கடந்த வாரம் ராகுல்காந்தியின் இந்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்ற கருத்தை கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். இதனால் என் கையில் இருந்த 5 லிட்டர் பால் நிரம்பிய பக்கெட் கீழே நழுவி விழுந்துவிட்டது.
இதன் மதிப்பு ரூ250. ராகுல் காந்தி இந்திய நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறார் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ராகுலுக்கு எதிராக தேசத்துரோக குற்றம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ரோசெரா சப்-டிவிஷன் சிவில் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதா என்பது தெரியவில்லை.
The post ராகுல் காந்தியால் 5 லிட்டர் பால் கீழே கொட்டிவிட்டது: பீகார் நீதிமன்றத்தில் வழக்கு appeared first on Dinakaran.