புதுடெல்லி: ரியல் எஸ்டேட் துறையில் நாக்பூர், ஜெய்ப்பூர், லக்னோ நகரங்கள் தான் நம்பர் 1 என்பது ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் உள்ள நகரங்களில் ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமான நகரங்கள் குறித்த ஆய்வை ரியல் எஸ்டேட் ஆலோசகர் கோலியர்ஸ் இந்தியா நிறுவனம் செய்து வருகிறது.
ஒவ்வொரு நகரங்களின் உள்கட்டமைப்பு, கட்டமைப்புகள், சமூக கட்டமைப்பு, மக்கள் தொகை வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட 4 அளவீடுகள் அடிப்படையில் இந்தியாவிலேயே ரியல் எஸ்டேட் துறைக்கு அதிக சாதகமான நகரமாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் முதலிடம் பிடித்துள்ளது. அதை தொடர்ந்து 2ம் இடத்தை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், 3ம் இடத்தை உத்தரபிரதேச தலைநகர் லக்னோ ஆகிய நகரங்கள் பிடித்துள்ளன.
The post ரியல் எஸ்டேட் துறையில் நாக்பூர், ஜெய்ப்பூர், லக்னோ நகரங்கள் தான் நம்பர் 1: ஆய்வறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.