புதுடெல்லி: மக்களவையில் துணை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது,‘‘வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியான விஜய் மல்லையாவிடம் இருந்து மட்டும் ரூ.14,131 கோடி மீட்டு, அமலாக்கத்துறை வங்கிகளுக்கு திருப்பிக் கொடுத்துள்ளது” என்றார். இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் விஜய் மல்லையா பதிவிடுகையில், கடன் மீட்பு தீர்ப்பாயம் கிங்பிஷர் ஏர்லைன்சின் கடன் ரூ. 1200 கோடி என்றும் வட்டியுடன் சேர்த்து ரூ. 6203 கோடி என்று தீர்ப்பளித்தது. ரூ. 6203 கோடி கடனுக்கு என்னிடம் இருந்து ரூ.14,131.6 கோடியை வசூலித்துள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நான் இன்னும் ஒரு பொருளாதார குற்றவாளிதான். என்னிடம் இருந்து இரண்டு மடங்கு தொகை வசூலித்தது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வங்கிகள் சட்டப்பூர்வமாக விளக்கம் அளிக்கவில்லை என்றால்,நிவாரணம் பெறுவதற்கு எனக்கு உரிமை உண்டு. தீர்ப்பில் கூறப்பட்ட கடனைத் தாண்டி என்னிடம் இருந்து 8000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கடன் மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா கடந்த 2016 ல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். விஜய் மல்லையாவை பொருளாதார குற்றவாளியாக அறிவித்து அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post ரூ.6203 கோடி கடன் பாக்கிக்கு ரூ.14,131 கோடி வசூல்: தொழிலதிபர் விஜய் மல்லையா புலம்பல் appeared first on Dinakaran.