டெல்லி: பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் கிரண் ரிஜிஜூ தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் முக்கிய எம்.பி.க்கள் இதில் கலந்து கொண்டனர். இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு;
வக்பு மசோதா குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும்
வக்பு மசோதா குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளோம். வக்பு மசோதா விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் எதிர்க்கட்சிகளின் திருத்தங்களை ஏற்கவில்லை என தெரிவித்துள்ளார்.
ஆளுநர் அரசியல் சட்டத்தை மீறி செயல்படுகிறார்: டி.ஆர்.பாலு
ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டு வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் அத்துமீறல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். இயற்கை பேரிடர் நிதியை வழங்குமாறு பிரதமருக்கு, முதல்வர் ஏற்கனவே பலமுறை கடிதம் மூலம் வலியுறுத்தினார். ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரியுள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வில் உள்ளது என டி.ஆர்.பாலு கூறினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தல்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கூறினார்.
பிரதமர் தலைமையில் குழு அமைக்க வேண்டும்: டி.ஆர்.பாலு
இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த பிரதமர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் என்றார்.
யுஜிசி அறிக்கை-6ம் தேதி திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்: டி.ஆர்.பாலு
யுஜிசி வரைவு அறிக்கைக்கு எதிராக டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பாஜக ஆட்சியில் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீது விவாதம் நடத்த அனுமதிப்பது இல்லை என திருச்சி சிவா எம்.பி. குற்றச்சாட்டியுள்ளார்.
The post வக்பு மசோதா குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளோம்: டி.ஆர்.பாலு பேட்டி appeared first on Dinakaran.