புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமூக வலைதளத்தில் பதிவிடுகையில், வட கிழக்கு மாநிலம் மணிப்பூர் மற்றும் கவுகாத்தி மண்டலத்தில் ரூ.88 கோடி மதிப்புள்ள மெத்தாம்பெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச போதை கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 13ம் தேதி மணிப்பூரின் லிலோங் என்ற இடத்தில் ஒரு லாரியை மடக்கி போதை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 102.39 கிலோ மெத்தாம்பெட்டமைன் இருந்தது. இது தொடர்பாக லாரியில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அதே நாளில் கவுகாத்தியில் மண்டல அதிகாரிகள் அசாம்-மிசோரம் எல்லையில் ஒரு காரை சோதனை நடத்தி அதில் இருந்த 7.48 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதை பொருளை கைப்பற்றினர். காரில் வந்த நபர் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் மதிப்பு ரூ.88 கோடி என குறிப்பிட்டுள்ளார்.
The post வட கிழக்கு மாநிலங்களில் ரூ.88 கோடி போதை பொருள் சிக்கியது appeared first on Dinakaran.