புதுடெல்லி: சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம், பராக்கிரம தினமாக ஒன்றிய அரசால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேதாஜி பிறந்த இடமான ஒடிசா, கட்டாக்கில் நேற்று விழா நடந்தது. இதில், காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றுகையில், நேதாஜியின் பிறந்தநாளான இன்று, முழு தேசமும் அவரை மரியாதையுடன் நினைவுகூர்கிறது. நேதாஜியின் வாழ்க்கை மக்களுக்கு தொடர்ச்சியான உத்வேகத்தை அளிக்கிறது.
சொகுசு வாழ்க்கையை தவிர்த்து விட்டு நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார். அதே போல் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டி எழுப்ப நாம் அனைவரும் சொகுசு வாழ்க்கை விட்டு வெளியே வர வேண்டும். உலக அளவில் நம்மைசிறந்தவர்களாக மாற்ற வேண்டும். அதே போல் சிறந்ததை தேர்ந்தெடுத்து செயல்திறனில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவின் ஒற்றுமைக்கு நேதாஜியின் வாழ்க்கையில் இருந்து உத்வேகம் பெற வேண்டும். நாட்டை பலவீனப்படுத்தி அதன் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்த முயல்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்றார்.
The post வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக ஒன்றுபட வேண்டும்: நேதாஜி பிறந்த நாளில் பிரதமர் மோடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.