துபாயில் வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்கும்படி கேட்டு தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது சரியான முடிவாகும்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல், அதைத் தொடர்ந்து நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை ஆகியவற்றை சுட்டிக்காட்டி சட்ட மாணவர்கள் 4 பேர் தொடர்ந்த மனுவில், ராணுவத்தின் தியாகத்தை அவமதிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டி நடப்பதாகவும், இதன்மூலம் ராணுவத்தினர் ஊக்கமிழக்கும் நிலை ஏற்படும் என்று கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.