சென்னை: 2025 – 26ம் ஆண்டிற்கான வேளாண் மற்றும் உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பின்னர் அவர் ஆற்றிய உரையில்,
*மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் (eNAM) 56 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை ஒருங்கிணைத்தல்.
*தமிழ்நாட்டில் அதிக வரத்துள்ள 50 உழவர் சந்தைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வகையில், உள்ளுர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
*வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட பொது சேகரிப்பு மையங்களில் வேளாண் விளைபொருட்கள் வர்த்தகம்.
*உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு (FPO) ரூ.10 இலட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்.
*4 ஆண்டுகளில் 35 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
*புதிதாக 5 விளைபொருளுக்கு புவிசார் குறியீடு பெற ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். நல்லூர் வரகு, நத்தம் புளி , காரைக்குடி கொய்யா , கப்பல்கட்டி முருங்கை, வேதாரண்யம் முல்லை ஆகிய 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்
*51 நீர்வடிப்பகுதிகளில் 30,910 எக்டர் பரப்பில் தருமபுரி,திண்டுக்கல், கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டகளில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.68 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*தமிழ்நாட்டில் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் 2030, 2050 ஆண்டுகளில் பயிர்களில் ஏற்படும் பாதிப்புகள் கணிக்கப்பட்டுள்ளன.
*அதிக லாபம் தரும் மாற்றுப் பயிர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சிக்கென ரூ.1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
*வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் பெயரில், வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகள் ஊக்குவிப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் மாதம் 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் முகாம் நடத்தப்படும்.
*தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் ‘கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்’ வரும் ஆண்டில் 2338 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும்.
*இதுவரை 54,000 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தற்போது வரை 10, 346 கோடி தொகையும், வட்டித் தொகையும் தமிழ்நாடு அரசால் விடுவிக்கப்பட்டுள்ளன.
*2025-26-ல், ரூ. 1,427 கோடி தள்ளுபடி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*நெல் கொள்முதல் மூலம் ரூ. 297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
*வேளாண் துறைக்கு மொத்தம் ரூ. 45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
The post வேளாண் துறைக்கு மொத்தம் ரூ. 45,661 கோடி நிதி ஒதுக்கீடு.. 5 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வழிவகை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு!! appeared first on Dinakaran.