புதுடெல்லி: என்சிஇஆர்டியின் எட்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் முகாலய பேரரசர்களின் ஆட்சியை குறித்து விளக்கும் பாடங்கள் இடம்பெற்றுள்ளது. என்சிஇஆர்டியின் எட்டாம் வகுப்பு புதிய பாடப் புத்தகம் இந்த வாரம் வெளியிடப்பட்டது.சமூகத்தை ஆராய்தல்; இந்தியா மற்றும் அதற்கு அப்பால்(Exploring Society: India and Beyond) என்ற தலைப்பில் வந்துள்ள இந்த புத்தகத்தில் டெல்லி சுல்தான்கள், முகாலயர்கள், மராத்தியர்கள் மற்றும் காலனித்துவ சகாப்தத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் புதிய என்சிஇஆர்டியின் பாடத்திட்டத்தில் முதலாவதாகும்.
புத்தகத்தின் தொடக்கத்தில் வரலாற்றில் சில இருண்ட காலகட்டங்கள் பற்றிய குறிப்பு என்ற தலைப்பில் ஒரு பகுதி உள்ளது. போர் மற்றும் ரத்தக் களரியை முதன்மையாக கொண்ட உணர்வுபூர்வமான மற்றும் வன்முறை நிகழ்வுகள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. 13 முதல் 17ம் நூற்றாண்டு வரையிலான இந்திய வரலாற்றை உள்ளடக்கிய அத்தியாயம் இந்தியாவின் அரசியல் வரைபடத்தை மறுவடிவமைத்தல், டெல்லி சுல்தான்களில் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, விஜயநகர பேரரசு, முகாலயர்கள், சீக்கியர்களின் எழுச்சி குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
பாடப்புத்தக்கத்தில் பாபர் நகரங்களில் முழு மக்களையும் கொன்று குவித்த ஒரு மிருகத்தனமான மற்றும் இரக்கமற்றவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவுரங்கசீப் கோயில்களையும், குருத்வாராக்களையும் அழித்த ராணுவ ஆட்சியாளர் என்றும், டெல்லி சுல்தான் மற்றும் முகாலயர்கள் அந்த காலகட்டத்தில் பல மத சகிப்புதன்மையை கொண்டிருந்தனர் என்பதும் பாடத்தில் சுட்டிக்காட்டப் படுகின்றது.
* 17000 அரசுப்பள்ளி பாடத்திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம்
உத்தரகாண்ட் கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் கூறுகையில், ‘‘170000 அரசுப்பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத் கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலை உத்தரகாண்ட் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை, மாணவர்களின் தினசரி பிரார்த்தனை அமர்வுகளின்போது ராமாயணம், பகவத் கீதையில் இருந்து வசனங்களை கூறுவார்கள்” என்றார்.
The post ‘அக்பரின் ஆட்சி கொடூரமானது, பாபர் இரக்கமற்றவர்’: என்சிஇஆர்டி 8ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் புதிய பாடம் சேர்ப்பு appeared first on Dinakaran.