டெல்லி: என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகத்தில் முகலாய ஆட்சியாளர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாபர், அக்பர் மற்றும் அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டதாக என்.சி.இ.ஆர்.டி-யின் புதிய பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கான பாடப்புத்தகத்தை தயாரிக்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வாரியமான என்.சி.இ.ஆர்.டி 8ம் வகுப்பு சமூக அறிவியல் படத்துக்கான புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
புத்தகத்தின் தொடக்கத்தில் வரலாற்றின் இருண்ட காலகட்டம் பற்றிய குறிப்பு என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. அதில் பாபர் கொடூரமான, இரக்கமற்ற ஆட்சியாளராக இருந்தார் என்றும், நகரங்களின் அனைத்து மக்களையும் கொன்று குவித்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராணுவ ஆட்சியாளராக அவுரங்கசீப் விளங்கியதாகவும், கோயில்களையும், குருத்வாராக்களையும் அவர் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்பர் ஆட்சி காலத்தில் 30,000 அப்பாவிகளை கொல்ல உத்தரவிட்டதாகவும், முஸ்லீம் அல்லாதவர்களுக்கு நிர்வாகத்தில் உரிய இடம் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மராட்டிய மன்னர்கள், ராஜபுத்திரர்கள் குறித்து உயர்வாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
The post அக்பர், பாபர், அவுரங்கசீப் கொடூரமான ஆட்சியாளர்கள்: என்.சி.இ.ஆர்.டி வெளியிட்டுள்ள புதிய பாடப்புத்தக்கத்தால் சர்ச்சை appeared first on Dinakaran.