கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் நேற்று காலை குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. அதன் ஒரு பகுதியாக கவுகாத்தியின் பெஹர்பரி பகுதியில் உள்ள பிரம்மபுத்திரா காய்கறி சந்தையில் ஒரு வளாகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது அங்கு லாரிகள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தில் குண்டு வெடித்தது போன்று பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் பீதியடைந்தனர். இதுகுறித்து அசாம் காவல்துறை ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரெஹபாரி பகுதியிலும் இதேபோல் பலத்த வெடி சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
ஆனால் அதை காவல்துறை மறுத்துள்ளது. இந்த பீதி அடங்குவதற்குள், அசாமில் தடை செய்யப்பட்ட உல்பா அமைப்பு சார்பில் சில பத்திரிகைகளுக்கு, “அசாமின் லால்மதி, ரெஹாபரி உள்பட பல இடங்களில் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன” என மின்னஞ்சல் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post அசாமில் குண்டுவெடிப்பா? appeared first on Dinakaran.