டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 3-வது வாரத்தில் முதல் நாளில் அலுவல்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை இன்று காலை தொடங்கிய உடனே அதானி விவகாரம், சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தியது உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கட்சிகள் எழுப்ப முயன்றனர். இதனால் மக்களவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கபட்டது.
இதனை தொடர்ந்து நடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சார்ந்த எம்.பி.க்கள் கவுதம் அதானியின் நிதி முறைகேடுகளை முன்வைத்து இன்றும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர். இன்று நூதன முறையில், மோடி மற்றும் அதானியுடைய உருவம் பொறித்த முகமூடிகளை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அணிந்த படி கண்டன ஆர்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் முன்னெடுத்து செல்க்கின்றனர்.
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் கந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பிக்கள் டி.ஆர், பாலு, கனிமொழி, உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அனைவரும் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
The post அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி ‘இந்தியா’ கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்! appeared first on Dinakaran.