சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாபெரும் மக்கள் பேரியக்கமாம் அதிமுக, அக்.17-ம் தேதி 54-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, அக்.17, 18-ம் தேதிகளில், கட்சி அமைப்புரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும்; புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
அதற்கான இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி17-ம் தேதி சேலத்தில் நான் உரையாற்றுகிறேன். மாவட்டச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களுக்கான நிகழ்ச்சிகளை அதிமுகவின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.